கேரள வயநாட்டில் உள்ள காங்., எம்.பி ராகுல் காந்தி அலுவலகம் சூறை : சுவர் ஏறி குதித்து இந்திய மாணவர் சங்கம் அத்துமீறல்… வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2022, 7:42 pm
Rahul Office Vandalised -Updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். இவரது கட்சி அலுவலகம் வயநாடுவில் உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

இதனை அக்கட்சி உறுதி செய்து உள்ளது. இதுபற்றிய வீடியோவும் வெளிவந்து உள்ளது. அதில், கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினர் அமர்ந்திருக்கும்போது, வெளியே இருந்து வந்த சிலர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

இதுபற்றி காங்கிரஸ் கட்சி டுவிட்டர் வழியே வெளியிட்ட செய்தியில், இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) அமைப்பின் கொடிகளை ஏந்தியபடி குண்டர்கள் வந்தனர். அவர்கள் ராகுல் காந்தியின் வயநாடு அலுவலகத்தின் சுவர் மீது ஏறி, குதித்து உள்ளே வந்தனர். கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி அமைப்புகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்துவருகிறது. இதனால் அடிக்கடி வன்முறையும் அங்கு வெடிக்கிறது. சமீபத்தில் அம்மாநில முதலமைச்சருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தை நடத்தியது.

திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த போராட்டங்களுக்கு பதிலடியாக தற்போது வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகத்தை இடது சாரி அமைப்பை சார்ந்தவர்கள் சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

Views: - 326

0

1