ஐந்து மாநில தேர்தல் படுதோல்வியால் அப்செட்..! எம்பிக்கள் கூட்டத்தில் வெளிக்காட்டிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி..!

7 May 2021, 1:48 pm
Sonia_Gandhi_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் செயல்திறன் மிகவும் ஏமாற்றமளிப்பதாகவும், கட்சி எம்.பி.க்கள் இந்த பின்னடைவு குறித்து உண்மையாகவும் நேர்மையாகவும் ஆராய்ந்து, உரிய பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் மெய்நிகர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், சட்டமன்ற தேர்தல் முடிவுகளை மறுஆய்வு செய்ய காங்கிரஸ் செயற்குழு (சி.டபிள்யூ.சி) விரைவில் கூடும் என்றார்.

“மிகவும் துரதிர்ஷ்டவசமாக, எல்லா மாநிலங்களிலும் நமது சொந்த செயல்திறன்,  எதிர்பாராத வகையில் மிகவும் ஏமாற்றமளித்தது.” என்று அவர் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறினார்.

“முடிவுகளை மறுபரிசீலனை செய்ய சி.டபிள்யூ.சி விரைவில் கூடுகிறது. ஆனால் ஒரு கட்சியாக, கூட்டாக நாம் இந்த பின்னடைவிலிருந்து மனத்தூய்மை மற்றும் நேர்மையின் உணர்வைப் பெற வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது.” என்று அவர் கூறினார்.

மேற்கு வங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள சட்டப்பேரவை தேர்தல்களில் முறையே மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் மற்றும் இடது கட்சிகள் வெற்றிபெற்றதற்காக காங்கிரஸ் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தத் தேர்தல்களில் காங்கிரஸ் அசாம் மற்றும் கேரளாவை வெல்லத் தவறியது மற்றும் புதுச்சேரியில் தோல்வியடைந்தது. மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியையும் வெல்லத் தவறிய நிலையில், தமிழ்நாட்டில் திமுகவுடனான கூட்டணியால் தாக்குப் பிடித்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை  வென்றது.

Views: - 134

0

0