சோனியாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி… காங்கிரசுக்கு கல்தா கொடுத்த குலாம் நபி ஆசாத்..!!

Author: Babu Lakshmanan
26 August 2022, 11:58 am
Quick Share

காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளால் அதன் மூத்த தலைவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு காரணம், கட்சியின் தலைமை வலுவாக இல்லாததுதான் என்று அவர்கள் கருதுகின்றனர்.

எனவே, சிறப்பான, நல்ல தலைவரை கட்சிக்கு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சியின் தலைமைக்கு எதிராக திரண்டவர்கள் ஜி23 தலைவர்கள் அணியாகும்.

இதில், இடம்பெற்றிருந்தவர்தான் குலாம் நபி ஆசாத். இவர் நேரடியாக காங்கிரஸ் கட்சியின் குறைகளை எடுத்துக் கூறி வந்தார். எனவே, ஜி23 தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.

Sonia - Updatenews360

இன்னும் ஒரு சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியிருப்பது காங்கிரஸுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 220

0

0