தைவான் தேயிலையை அசாம் தேயிலை போல் காட்டி ஏமாற்றிய காங்கிரஸ்..! அம்பலப்படுத்திய பாஜக அமைச்சர்..!

4 March 2021, 2:58 pm
congress_tea_updatenews360
Quick Share

காங்கிரஸ் கட்சி அசாமில் தனது “ஆக்சோம் பசான் அஹோக்” எனும் தற்போதைய பிரச்சாரத்திற்காக தைவானில் எடுக்கப்பட்ட தேயிலைத் தோட்டத்தின் படத்தைப் பயன்படுத்தியுள்ளதாக பாஜக மூத்த தலைவரும் அசாம் அமைச்சருமான ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர்களால் அசாமை கூட அங்கீகரிக்க முடியாது என்று பிஸ்வா கூறினார். இந்த தவறு, அசாம் மக்களுக்கும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு அவமானம் என்று அவர் கூறினார்.

“அதிகாரப்பூர்வ காங்கிரஸ் பிரச்சாரப் பக்கம் தைவானில் உள்ள தேயிலைத் தோட்டத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி அசாம் பச்சாவ் (அசாமைக் காப்பாற்றுங்கள்) என்று கூறுகிறது. காங்கிரஸ் தலைவர்களால் அசாமை கூட அங்கீகரிக்க முடியவில்லையா? இது எங்கள் மாநிலத்தின் அசாம் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை அவமதிப்பதாகும்.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

காங்கிரசின்அசாம் பச்சாவ் பிரச்சாரத்தின் புகைப்படத்தையும் பாஜக அமைச்சர் ட்வீட் செய்து, அது தைவானில் உள்ள நாந்தோ தேயிலைத் தோட்டத்திலிருந்து வந்த புகைப்படம் என்பதற்கான ஆதாரத்தையும் பகிர்ந்துள்ளார்.

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை சட்டமன்றத் தேர்தல்களில் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 10 லட்சம் தேயிலை தொழிலாளர்கள் மற்றும் தேயிலை பழங்குடி சமூகத்தின் 60 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். அவர்கள் அசாமில் ஒரு பெரிய வாக்கு வங்கியாக உள்ளனர்.

பல ஆண்டுகளாக, அசாம் தேயிலை வாக்குகள் காங்கிரற்கு சென்ற நிலையில் கடந்த முறை இவை பாஜகவுக்கு மாறின. மொத்தம் 126 இடங்களில் 35 சட்டசபை தொகுதிகளில் தேயிலை பழங்குடி சமூகம் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.

இதனால் அவர்களைக் கவர, அசாம் தேயிலைத் தோட்ட புகைப்படத்தை பகிர்வதாக நினைத்து, தைவானில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, தேயிலைத் தோட்ட பழங்குடிகளிடம் அதிருப்தியை அதிகரித்து விட்டது.

எப்படியாவது அசாம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிவிட காங்கிரஸ் முயற்சி செய்து வரும் நிலையில், தனக்குத் தானே வினைவைத்துக் கொண்டு அசாம் காங்கிரஸ் தலைமை வாய்ப்புகளை வீணாக்கிக் கொள்வதாக காங்கிரஸ் தொண்டர்கள் கவலைப்படுகின்றனர்.

Views: - 20

0

0