டெல்லியில் புதிய பாராளுமன்றம்: கட்டுமான பணிகள் நாளை தொடங்குகிறது..!!

14 January 2021, 2:20 pm
new parliement - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கான கட்டுமான பணிகள் நாளை தொடங்குகிறது.

டெல்லியில் தற்போதுள்ள பாராளுமன்ற கட்டடம் 94 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது. இடப்பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களினால் அதன் அருகிலேயே 971 கோடி ரூபாய் செலவில் புதிய பாராளுமன்ற கட்டடம், தலைமை செயலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், துணை ஜனாதிபதிக்கான புதிய இல்லம் கட்டவும் மூன்று கி.மீ. தொலைவிலான ராஜபாதையின் மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டது.

இதற்கான கட்டுமான பணி ஒப்பந்தம் டாடா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி புதிய பாராளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளுக்கான புராதன கட்டட பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் ஜனவரி 11ல் கிடைத்தது.

இந்நிலையில் புதிய பாராளுமன்றத்தின் கட்டுமான பணிகள் நாளை துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் தை மாத பிறப்பு மகர சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதன் முதல் சூரிய உதய தினம் நல்ல காரியங்களை துவங்குவதற்கு உகந்த நாளாக கருதப்படுவதால் கட்டுமானப் பணிகளை நாளை முதல் துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளை 10 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 2022ம் ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பு புணரமைக்கப்பட்ட ராஜபாதையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 9

0

0