‘ரோடுன்னா கத்ரீனா கன்னம் மாதிரி வளவளன்னு இருக்கணும்’: சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அமைச்சர்…குவியும் கண்டனம்..!!

Author: Aarthi Sivakumar
25 November 2021, 5:08 pm
Quick Share

ஜெய்ப்பூர்: சாலைகள் நடிகைகளின் கன்னங்கன் போல வளவளவென்று இருக்க வேண்டுமென கூறி சர்ச்சையில் ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக்கெலாட் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திரசிங்குதா பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அமைச்சரான பிறகு தனது தொகுதிக்கு முதல்முறையாக வருகை தந்தபோது, தொகுதி மக்கள் சாலைகளின் அவலநிலை குறித்து கோபத்துடன் புகார் அளித்துள்ளனர். இதனால், மக்களை சிரிக்க வைப்பதற்காக, அதிகாரிகளிடம் தனது தொகுதியின் சாலைகளை பிரபல பாலிவுட் நடிகை காத்ரீனா கைஃப் கன்னங்களை போல வளவளப்பாக அமைக்க வேண்டும் எனக் கூறினார். அமைச்சரின் இந்த பேச்சைக் கேட்ட ஊர்மக்கள் கைதட்டி சிரித்தனர்.

அதோடு விடாத அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, நடிகையும் பாஜக எம்பியுமான ஹேமமாலினிக்கு வயதாகிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக கத்ரீனா கைப்பின் கன்னங்களை சாலைகளுக்கான தரமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறியதாக வெளியான தகவல் மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமைச்சரின் பேச்சுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பதிவிட்டுள்ள பலரும், சாலையின் தரத்தை ஒப்பிட அமைச்சருக்கு ஒரு பெண்ணின் கன்னம்தான் கிடைத்ததா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 182

0

0