பேண்ட் ஜிப் திறந்திருந்தா பாலியல் குற்றமா? பெண் நீதிபதியின் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தீர்ப்பால் பரபரப்பு!!
29 January 2021, 5:31 pmமகாராஷ்டிரா : 5 வயது சிறுமியை 50 வயது ஆண் பாலியல் கொடுமை செய்ததாக கூறப்படும் வழக்கில் பெண் நீதிபதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 5 வயது சிறுமியை, 50 வயது ஆண் லிப்னஸ் என்பவர் பாலியல் கொடுமை செய்யததாக கைது செய்யப்பட்டார். இத்ந வாக்கு விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து 5வருடம் கடும் காவல் தண்டனை பிறப்பித்தது.
இந்த சம்பவம் நடைபெற்று குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரில், தான் வேலைக்கு சென்று திரும்பி வரும் போது லிப்னஸ் எனது மகளின் கையை பிடித்திருந்தார். அவருடைய பேண்ட் ஜிப் திறந்திருந்தது. இது குறித்து மகளிடம் பேட்ட போது அந்த நபர் தன்னை படுக்கை அறைக்கு உறங்க அழைத்ததாக தெரிவித்தார். இவ்வாறு தாய் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதை வைத்து லிப்னஸ் என்பவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு தண்டனை பிறப்பித்தது. இந்த நிலையில் லிப்னஸ் மும்பை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா கடந்த 15ஆம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம்சாட்டப்பட்டவரின் பேண்ட் ஜிப் திறந்திருப்பதை வைத்தும், சிறுமியின் கையை பிடித்திருப்பதையும் வைத்து பாலியல் குற்றமாக கருத முடியாது என்றும், சம்மந்தப்பட்ட குற்றவாளிக்கு 5 ஆண்டு தண்டனையை 5 மாதமாக குறைத்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்த பெண் நீதிபதி புஷ்பா, உடலோடு உடல் தொடுவதுதான் பாலியல் வன்முறை என்றும், துணி அணிந்திருக்கும் போது பெண்ணை தொட்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என மாறுப்பட்ட தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவுக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
0
0