குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து: சித்தூரை சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழப்பு: சோகத்தில் மூழ்கிய கிராமம்

Author: kavin kumar
8 December 2021, 10:26 pm
Quick Share

திருப்பதி: குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் சாய் தேஜ் உயிரிழந்ததால் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் அருகே ஏற்பட்ட விபத்தில் தலைமை தளபதி பிபின் ராவத் அவருடைய மனைவி மற்றும் 11 பேர் மரணமடைந்தனர்.மரணம் அடைந்தவர்களில் ஒருவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள குர்பல்கோட்ட மண்டலம் எகுவரகட்டா கிராமத்தை சேர்ந்த சாய் தேஜ் என்பவர் ஆவார். ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த சாய்தேஜ் கடந்த 2013 ஆம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.

ராணுவத்தில் லேன்ஸ் நாயக் ஆக பணியில் இருந்த அவர் தலைமை தளபதியின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி,மகன்,மகள் ஆகியோர் உள்ளனர். கடந்த விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் மீண்டும் பணிக்கு சென்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துவிட்டார். அவருடைய மரணம் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ,எகுவரகட்டா கிராமத்தினர் ஆகியோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 587

0

0