முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்தலாம்: மத்திய அரசு..!!

7 May 2021, 6:42 pm
Doctors_Corona_UpdateNews360
Quick Share

புதுடெல்லி: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை தடுக்க முடியும் என மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்து உள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும். இந்நிலையில், மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3-வது அலையை தடுக்க முடியும். அனைத்து மாநிலங்களிலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் கொரோனா 3வது அலையை தடுக்க முடியும் என்றார்.

Views: - 183

0

0