டெல்லியில் இன்று மேலும் 386 பேருக்கு கொரோனா பாதிப்பு: 16 பேர் பலி…!!

12 January 2021, 6:07 pm
new corona - updatenews360
Quick Share

புதுடெல்லி: டெல்லியில் இன்று மேலும் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,30,892 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக டெல்லியில் இன்று 16 பேர் கொரோனாவால் உயிரிழந்ததையடுத்து அங்கு இதுவரை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,707 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், இன்று ஒரே நாளில் 545 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

டெல்லி முழுவதும் இதுவரை 6,17,006 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது அங்கு மொத்தம் 3,179 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Views: - 6

0

0