கேரளாவில் மீண்டும் 30 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு..!

Author: Udhayakumar Raman
1 September 2021, 9:49 pm
Corona Nurse-Updatenews360
Quick Share

கேரளா மாநிலத்தில் இன்று மீண்டும் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32,803 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 21,640பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 173பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவை மொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சத்து 38 ஆயிரத்து 614 ஆக அதிகரித்துள்ளது.இதனால் கேரளாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை20,961 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனா சிகிச்சையில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 912 பேர் உள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

Views: - 160

0

0