கேரளாவில் இன்று 12,787 பேருக்கு கொரோனா உறுதி: 150 பேர் தொற்றுக்கு பலி..!!

23 June 2021, 7:03 pm
Kerala Corona -Updatenews360
Quick Share

திருவனந்தபுரம்: கேரளாவில் தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,24,326 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையாமல் ஒரே சீரான எண்ணிக்கையில் இருந்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,787 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இன்று 150 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து 13,683 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கேரளாவில் தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,445 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 10.29 சதவிகிதமாக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 99,390 ஆக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பை கண்டறிய இன்று 1,24,326 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

Views: - 166

0

0