கேரளாவில் இன்று 7,545 பேருக்கு கொரோனா உறுதி: 55 பேர் உயிரிழப்பு
Author: kavin kumar4 November 2021, 9:46 pm
கேரளா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகாரித்த வண்ணம் இருந்தது.இதனால் தினமும் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பாதிப்புக்குள்ளாகினர். அதை கருத்தில் கொண்டு கொரோனா பரவலைத் தடுக்க கேரளத்தில் பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.இதனால் கடந்த சிலதினங்களாக கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில், கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 7,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா அரசு அறிவித்துள்ளது. மேலும் 5,936 குணமடைந்துள்ளதாகவும்,
கொரோனாவால் இன்று 55 பேர் உயிரிழந்தது உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் 71,841 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 74,552 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
0
0