கேரளாவில் 7,823 பேருக்கு கொரோனா உறுதி

Author: kavin kumar
12 October 2021, 11:37 pm
TN Corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது. மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கேரளாவில் சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அந்த வகையில் கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 7,823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். கேரளாவில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 48,09,619 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 26,448 ஆகவும் உயர்ந்துள்ளன.மேலும் 12,490 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 46,85,932 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம், 5 மாதங்களுக்குப் பிறகு நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருவோர் எண்ணிக்கை 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 96,646 ஆக உள்ளது.

Views: - 569

0

0