பிரபல தனியார் நர்சிங் கல்லூரியில் 43 மருத்துவ மாணவிகளுக்கு கொரோனா உறுதியானதால் பரபரப்பு : கல்லூரிக்கு விடுமுறை!!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 12:50 pm
Nursing College Corona- Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஒரே கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவ, மாணவிகள் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் சல்மேடா ஆனந்த் ராவ் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் என்ற பெயரில் தனியார் மருத்துவ கல்லூரி உள்ளது. அங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில் கல்லூரி மாணவ, மாணவிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே அவர்களுக்கு வைத்திய பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அவர்களில் 43 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஒரே கல்லூரியில் 43 மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் அங்கு படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 251

0

0