கேரள மின்சார துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி

Author: Aarthi
8 October 2020, 8:24 am
kerala electric minister - updatenews360
Quick Share

கேரளாவில் மின்சார துறை அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில் அமைச்சர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே நிதித்துறை அமைச்சர் தாமஸ் ஐசக், தொழில்துறை அமைச்சர் இ.பி.ஜெயராஜன், வேளாண்மை துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது மின்சார துறை ரஅமைச்சர் மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வயது 75. தனக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், அவர் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Views: - 55

0

0