உலகளவில் நேற்று ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா! இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

30 November 2020, 11:36 am
World Corona - Updatenews360
Quick Share

உலக அளவில் நேற்று ஒரே ஒரு நாள் மட்டும் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பாதிப்புக்கு ஆளாகின. குறிப்பாக 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தாக்கம் குறைந்து வருவதால் பல்வேறு நாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Karnataka: Hoskote MLA tests positive for Covid-19 | Deccan Herald

இந்த நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு மருந்து நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில் கொரோனா தொற்று 2வது அலையாக ஒரு சில நாடுகளில் மீண்டும் பரவ ஆரம்பித்தள்ளது.

இந்த நிலையில் நேற்று மட்டும் உலக அளவில் ஒரே நாளில் 5 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் 40 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.

Positive COVID-19 cases now exceeds 1,000 in Derry City and Strabane -  Derry Now

அதே போல கொரோனா காரணமாக பலியானவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 820 பேர் பலியாகியுள்ளனர். மெக்ஸிக்கோவில் 586 பேரும், இத்தாலியல் 541 பேரும் என உலகளவில் 7 ஆயிரத்து 278 பேர் உயரிந்துள்ளனர்.

Airlines worldwide suspend flights to China due to Coronavirus | World News  | Zee News

கொரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், நேற்று மட்டும் 444 பேர் உயிரிந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்தியாவில் பாதிப்புகள் குறைந்து வருவது நினைவுகூரத்தக்கது.

Views: - 34

0

0