பிரிட்டனில் இருந்து ரிட்டன் ஆன மேலும் 6 பேருக்கு கொரோனா : டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!!

23 December 2020, 7:41 pm
Delhi New Corona -Updatenews360
Quick Share

இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவலில் இருந்து உலக நாடுகளே திக்குமுக்காடி தற்போது கொரோனா பரவல் குறைந்தது என பெருமூச்சு விட்டிருந்த நிலையில், மீண்டும் புதிய வகை கொரோனா பிரிட்டன் நாட்டில் பரவியுள்ளது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கு இந்தியா தடை விதித்தது. இதே போன்று பல நாடுகளும் இங்கிலாந்துடன் விமான சேவையை ரத்து செய்துள்ளது.

Frisking of ground staff reduces theft cases at Indira Gandhi International  Airport- The New Indian Express

இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து டெல்லி விமானநிலையத்திற்கு வந்த 6 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இவர்களுடன் பயணித்த 50 பயணிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 6 நபர்களுக்கு புதிய கொரோனா தாக்கம் உள்ளதா என அவர்களது ரத்தி மாதிரிகள் பரிசோதனை அனுப்பப்பட்டுள்ளன.

கொரோனா 2.0 புதிய வடிவு பெற்று பரவி வருவதால் பாதிக்கப்பட்டவர்களை தீவிரமாக மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். நேற்று இங்கிலாந்தில் இரந்து இந்தியா வந்த 20 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 1

0

0