12 நாடுகளில் இருந்து வந்த 6 பேருக்கு கொரோனா:ஒமைக்ரான் பாதிப்பு..??

Author: Udhayakumar Raman
1 December 2021, 10:10 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

ரிஸ்க் நாடுகளின் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக அச்சத்தில் இருந்த உலக நாடுகள் சற்று நிம்மதியடைந்திருந்த நிலையில், ஆல்ஃபா, டெல்டா வகை வைரஸ் அச்சம் ஏற்பட்டது. தொடர்ந்து பல திரிபுகளையடைந்த வைரஸுக்கு தற்போது ஓமைக்ரான் என பொதுப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் பல்வேறு திரிபுகளுடன் அதிக வேகத்தில் பரவி வருகிறது.மேலும், தடுப்பூசியை எதிர்க்கும் திறன் காரணமாக உலகநாடுகளை பீதியடைய வைத்துள்ள இந்த வைரஸ் ஏற்கனவே ஆஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், ஹாங்காங் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் ரிஸ்க் நாடுகள் என வகைப்படுத்தப்பட்ட 12 நாடுகளில் இருந்து டெல்லி வந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 11 சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 3,476 பயணிகளிடம் நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது தெரியவந்துள்ளது. பயணிகளிடம் நடத்திய RT-PCR பரிசோதனையில் 6 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதாக என கண்டறிய 6 பயணிகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Views: - 371

0

0