மீண்டும் மீண்டும் அதிகரிக்கும் தொற்று.. கேரளாவை கட்டிப் போட்ட கொரோனா : சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கு உத்தரவு!!

By: Udayachandran
22 July 2021, 7:21 pm
Kerala Again Lockdown -Updatenews360
Quick Share

கேரளா : கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் வரும் ஜூலை 24, 25 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நாள் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பலி எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்த நிலையில் நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

ஆனால் கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் 17,481 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 105 பேர் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்றை கட்டுப்படுத்த வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றை கட்டுப்படுத்த வருகிற ஜூலை 23 ஆம் தேதி மாநிலம் முழுவதும் கொரோனா பரிசோதனை முகாம்கள் மூலமாக பேரிடம் மேலாண்மை சட்டத்தின்படி 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது வெகுவாக குறைந்து வரும் நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகரித்து வருவது தமிழக- கேரள மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 163

0

0