அரசு உத்தரவை மீறி செயல்பட்ட பள்ளிகள்: இத்தனை மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பா?..

Author: Aarthi
10 October 2020, 5:19 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கர்நாடக மாநிலத்தில் அரசு உத்தரவை மீறி செயல்பட்ட ஆரம்ப பள்ளிகளில் 24 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெலகாவி மற்றும் கலபூரகி மாவட்டங்களில் சில ஆரம்பப்பள்ளிகள் அரசின் உத்தரவை மீறி வகுப்புகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள கல்வி அதிகாரிகள் வருகை தந்தனர்.

திடீரென கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் முற்றுகையிட்டதாலும், பள்ளிகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டது.

Views: - 63

0

0