கொரோனாவுக்கு இலக்காகும் மத்திய அமைச்சர்கள்: கலக்கத்தில் கேபினட்..!!

21 April 2021, 5:23 pm
north block - updatenews360
Quick Share

புதுடெல்லி: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர், அமைச்சர்கள் சினிமா பிரபலங்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்,

‘நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் அதில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், அனைவரும் பாதுகாத்து கொள்ளுங்கள் மேலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

Views: - 338

0

0