மத்திய அமைச்சர் சுரேஷ் அன்காடிக்கு கொரோனா தொற்று ..!

11 September 2020, 7:17 pm
Quick Share

மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் சுரேஷ் அன்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் கோர தாண்டவம் என்றுதான் ஓய்வு பெருமோ என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் சூழலில் அதன் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்துகொண்டேதான் போகிறது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஏராளமான அரசியல் கட்சியினர் பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.

இந்த சூழலில், கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் இறுதி கட்டத்தை நெறுங்கி உள்ளது. இருப்பினும் நாளுக்குக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவது பெரும் சவலாகவே உள்ளது.

இந்த சூழலில், மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் சுரேஷ் அன்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வரும் நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Views: - 0

0

0