கேரளாவில் 19,682 பேருக்கு கொரோனா: 152 பேர் உயிரிழப்பு

Author: Udhayakumar Raman
23 September 2021, 9:39 pm
TN corona -Updatenews360
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து எண்ணிக்கை அதிகரித்த நிலையிலேயே காணப்பட்டன.இந்நிலையில்கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 19,682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,510 பேர் குணமடைந்துள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 43,94,476 பேர் குணமடைந்துள்ள நிலையில் 24,191 பேர் உயிரிழந்துள்ளனர். 1,60,046 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,21,945 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Views: - 120

0

0