கட்டுப்பாடுகளை மதிக்காவிட்டால் ஊரடங்கு விதிக்கப்படும் : மக்களுக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை..!!!

12 April 2021, 7:56 pm
Lockdown_UpdateNews360
Quick Share

கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால், ஊரடங்கு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் வேகமெடுத்துள்ளது. கர்நாடகாவில் இன்று மட்டும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசு, மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காவிட்டால், ஊரடங்கு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளர்.

இது தொடர்பாக பிதார் நகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- கொரோனாவிடம் இருந்து மக்களை பாதுகாக்கவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கடைபிடிக்காவிட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் ஊரடங்கும் விதிக்கப்படும். முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

பொதுமக்கள் அறிவிக்க அரசு தயாராக இல்லை. ஆனால், மக்கள் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே கொரோனாவின் 2வது அலையில் இருந்து மீள முடியும், எனத் தெரிவித்தார்.

Views: - 27

0

0