விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை : முடிவு வராமல் வெளியில் அனுமதிக்க தடை..!

5 September 2020, 12:22 pm
Quick Share

வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயாம் கொரொனா சோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.சி.எம்.ஆர் புதிய ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கட்டாயம் கொரோனா சோதனை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக சர்வதேச விமான நிலையத்தில் தனியார் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு நான்கு மணி நேரத்தில் சோதனை முடிவுகள் வழங்கப்படும். அதுவரை பயணிகள் விமான நிலையத்திலேயே தங்கியிருக்க வசதிகள் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நடைமுறைகள் அடுத்த வாரம் முதல் அமலுக்கு வர உள்ளதாக விமானப் போக்குவரத்து துறை வட்டாரம் தகவல் அளித்துள்ளது.

Views: - 3

0

0