கேரளாவில் தொடர்ந்து குறையும் கொரோனா…!!இன்று 9,470 பேருக்கு கொரோனா

Author: kavin kumar
9 October 2021, 10:03 pm
Quick Share

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் பரவிய இந்த வகை வைரஸ் இன்று உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரள மாநிலத்தில்தான்.

இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது. இந்த சூழலில் கேரளாவில் 4 நாட்களுக்குப் பிறகு கொரோனா தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,470 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பால் மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 47 லட்சத்து 84 ஆயிரத்து 109 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 132 ஆக உள்ளது.

Views: - 231

0

0