ஒரு மாதமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட எதிர்க்கட்சி தலைவருக்கு கொரோனா : அவரே வெளியிட்ட டுவிட்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 January 2022, 10:44 am
chandrababu naidu corona - Updatenews360
Quick Share

ஆந்திரா : தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாத காலமாக தன்னுடைய சொந்த தொகுதியான குப்பம் தொகுதி உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 337

0

0