கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது

25 March 2020, 8:32 pm
corona test in 30 minutes
Quick Share

சென்னை : இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. இதுவரை 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மகாராஷ்ரா, கேரளா போன்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ நெருங்கியுள்ளது. இதுவரை 43 பேர் தீவிர சிகிச்சைக்கு பின் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.