கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி : மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

Author: Babu Lakshmanan
28 September 2021, 8:26 am
central gvt - updatenews360
Quick Share

சென்னை : கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்தி துணைச் செயலர் ஆஷிஷ் குமார் சிங் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது :- கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித் தொகையை, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசுகள் வழங்க வேண்டும். நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் மறு உத்தரவு வரும் வரை இந்த நிதியுதவியை மாநில அரசுகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி, 4,47,194 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 158

0

0