இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா ?
4 February 2021, 8:45 amசீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 22 லட்சத்து 76 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்
இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. பல மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.மேலும்,உலகம் முழுவதும் தற்போது 2வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,791,123 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 154,742 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 10,479,508 பேர் குணமடைந்தனர்
0
0
1 thought on “இந்தியாவில் கொரோனா பாதிப்பு இவ்வளவா ?”
Comments are closed.