கொரோனா : பாதிப்பு எண்ணிக்கை இவ்வளவா..? மக்கள் பீதி..!

26 March 2020, 7:42 am
Quick Share

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மகாராஷ்ரா, கேரளா போன்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவை பொருத்தவரை இந்த வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆகவும், குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 43 ஆகவும் உள்ளது.