இந்தியாவில் கொரோனா வைரஸ் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது…!!
7 September 2020, 8:15 amஉலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 8- லட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. ஆனால், தற்போது, பல மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 8,82,542 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. குணமடைந்தோர் விகிதம் 77.31% ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் விகிதம் 1.70% ஆக குறைந்துள்ளது.
0
0