இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1201 பேர் பலி…!!

12 September 2020, 8:24 am
TN Corona 5 Districts- updatenews360
Quick Share

உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகரித்து வருகிறது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இந்தியா உள்பட 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பீதியை கிளப்பி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கா, இத்தாலி, ஈரான் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளிலும் இந்த வைரஸின் தாக்கம் காணப்பட்டு வருகிறது. உலக அளவில் இதுவரை 9- லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்ற மாநிலங்களில்தான் இதன் பாதிப்பு அதிகம் உள்ளது. பல மாநிலங்களிலும் இந்த வைரஸ் தலைவிரித்தாடி வருகிறது.

இந்த நிலையில்,  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 45,62,414ல் இருந்து 46,59,984ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 97,570 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 76,271லிருந்து 77,472ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1201 பேர் உயிரிழந்தனர்

Views: - 0

0

0