அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்திற்கு இது அவசியம்..! புதிய விதிமுறை அமல்..!

7 November 2020, 5:34 pm
Haj_Pilgrimage_UpdateNews360
Quick Share

ஹஜ் யாத்ரீகர்கள் 2021’ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவுக்குச் செல்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா எதிர்மறை சான்றிதழை சமர்ப்பித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.

ஹஜ் குழு மற்றும் பிற அமைப்புகளுடன் இது தொடர்பாக ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர், சிறுபான்மை விவகாரங்களுக்கான அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 2021 ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

“விண்ணப்பதாரர்கள் ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது ஹஜ் மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, அனைத்து யாத்ரீகர்களும் தங்கள் கொரோனா எதிர்மறை அறிக்கையை ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை மூலம் எடுத்தது சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் சோதனை இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.

கொரோனா நிலைமை மற்றும் ஏர் இந்தியா மற்றும் பிற ஏஜென்சிகளிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களைக் கருத்தில் கொண்டு ஹஜ் 2021’க்கான போர்டிங் இடங்கள் பத்தாகக் குறைக்கப்பட்டுள்ளன என்றும் முக்தர் அப்பாஸ் நக்வி மேலும் கூறினார்.

முன்னதாக, நாடு முழுவதும் இதுபோன்ற 21 இடங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத், பெங்களூரு, கொச்சின், டெல்லி, குவஹாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் ஸ்ரீநகர் ஆகிய பத்து போர்டிங் இடங்கள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஹஜ் 2020’க்கு ஆண் துணை இல்லாத பிரிவில் பெண்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் ஹஜ் 2021’க்கும் செல்லுபடியாகும் என்று நக்வி கூறினார். அதே சமயத்தில் இந்த பிரிவின் கீழ் புதிய விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன என மேலும் தெரிவித்துள்ளார்.

Views: - 16

0

0