“100 கோடி” மாமூல் வழக்கில் சிக்கிய அனில் தேஷ்முக்கின் அந்தரங்க உதவியாளர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன்..! சிபிஐ அதிரடி..!

11 April 2021, 12:37 pm
anil_deshmukh_updatenews360
Quick Share

மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் வெளியிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க மகாராஷ்டிராவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முகின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிபிஐ பதிவு செய்த முதற்கட்ட விசாரணை தொடர்பாக சஞ்சீவ் பலண்டே மற்றும் குண்டன் ஆகிய இரு உதவியாளர்களும் சிபிஐ குழு முன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டிற்கு அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் நிறைந்த எஸ்யூவி வழக்கில் என்ஐஏ விசாரணையை எதிர்கொண்டு, இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் சச்சின் வேஸிடம் தேஷ்முக் மாமூல் வசூலிக்க கூறிய போது, பலண்டே அங்கு இருந்ததாக ஒரு கடிதத்தில் பரம் பிர் சிங் குற்றம் சாட்டியிருந்தார்.

அத்தகைய ஒரு உரையாடலின் போது குண்டன் இருந்ததாக சச்சின் வேஸ் தனது அறிக்கையில் கூறியதாகக் கூறப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தேஷ்முக் மீது லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்த விசாரணையை மேற்கொள்ள டெல்லியில் இருந்து மும்பைக்கு அதிகாரிகள் குழுவை சிபிஐ அனுப்பியது குறிப்பிடத்தக்கது. சிபிஐ ஏற்கனவே சச்சின் வேஸ், பரம் பிர் சிங் மற்றும் மும்பை காவல்துறை அதிகாரிகளை இந்த வழக்கில் விசாரித்துள்ளது.

Views: - 72

0

0