“எங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் போதும்“ அனுமதி மீறி திருப்பதி கோவிலில் திருமணம் செய்த ஜோடிகள்!!
27 January 2021, 7:08 pmஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கல்யாண மண்டபங்கள் மற்றும் திருமண கூடங்கள் அனுமதி இல்லாத காரணத்தால் கோவில் முன்பே ளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா ஊரடங்கிற்கு பின் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதித்து வருகின்றனர். திருப்பதி திருமலையில் திருமண மண்டபங்களில் மற்றும் திருமண கூடங்களில் ஆயிரக்கணக்கான திருமணங்கள் நடப்பது வழக்கம்.
கொரோனா பரவலின் காரணத்தினால் தேவஸ்தானம் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணக் கூடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றும் இன்றும் சுமார் 20 க்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள்திருமண மண்டபங்களில் மற்றும் திருமண கூடங்களில் அனுமதி கிடைக்கவில்லை.
இதனால் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திருமண ஜோடிகள் திருப்பதி ஏழுமலையான் கோவில் முன்பு அமைந்துள்ள அகிலாண்டம் அருகில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி வந்துவிட்ட காரணத்தினால் பக்தர்கள் வருகை என்பது அதிகரித்து வருகிறது. வரும் நாட்களில் முகூர்த்த நாட்களை கருத்தில் கொண்டு திருப்பதியில் வந்து திருமணம் செய்து கொள்பவர்களுக்கு தேவஸ்தானம் திருமண மண்டபங்கள் மற்றும் திருமண கூடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
0
0