உள்நாட்டில் உருவான கோவாக்சின் தடுப்பூசி பிப்ரவரியில் கிடைக்குமா?: ஐசிஎம்ஆர் தகவல்..!!

5 November 2020, 5:33 pm
icmr - updtaenews360
Quick Share

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பிப்ரவரி மாதத்தில் தயாராகிவிடும் என ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

ஐசிஎம்ஆருடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசி, எதிர்பார்த்ததையும் விட முன்னதாக, வரும் பிப்ரவரி மாதம் தயாராகி விடும் என ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கொரோனா நடவடிக்கை குழு உறுப்பினராக இருக்கும், ஐசிஎம்ஆர் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி ரஜினிகாந்த் கூறுகையில், கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் 2ம் கட்ட சோதனைகளில், இந்த தடுப்பூசி சிறந்த பலனை வெளிப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் சில பக்கவிளைவுகளுக்கும் வாய்ப்பிருக்கலாம் என தெரிவித்த அவர், அதை சந்திக்க தயார் என்றால் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். திட்டமிட்டபடி வெளியானால், கோவாக்சின் இந்தியாவின் முதல் உள்நாடு கொரோனா தடுப்பூசி என்ற பெருமையை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0