தமிழரின் கொரோனா மருந்து கோவாக்சினின் இரண்டாம் கட்ட சோதனை..! மத்திய அரசு அனுமதி..!

5 September 2020, 12:49 pm
Covaxin_Updatenews360
Quick Share

தமிழரான டாக்டர் கிருஷ்ணா எல்லாவின் நிறுவனமான, ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக்கின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவாக்சின் செப்டம்பர் 7 முதல் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது.

பிபிவி 152 கொரோனா வைரஸ் தடுப்பூசி அல்லது கோவாக்சின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் 380 தன்னார்வலர்கள் மீது நடத்தப்படும் என்று பாரத் பயோடெக் இன்டர்நேஷனலுக்கு இந்தியாவின் கூட்டு மருந்துகள் கட்டுப்பாட்டாளர் டாக்டர் எஸ் ஈஸ்வர ரெட்டி எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்கிய பின்னர் நான்கு நாட்களுக்கு கண்காணிக்கப்பட வேண்டும்.

சுகாதார சேவை இயக்குநரகம் ஜெனரல் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “செப்டம்பர் 3’ம் தேதி வீடியோ கான்பெரன்ஸ் கூட்டத்தின் மூலம் நடைபெற்ற கொரோனா நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இது ஆராயப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இதில் இரண்டாம் கட்ட சோதனைகளை 380 பங்கேற்பாளர்களுடன் நடத்துவதற்கு குழு பரிந்துரைத்தது. பங்கேற்பாளர்களைத் சோதனையிடுவதற்கான நேரம் 4 நாட்களில் திருத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது.” எனத் தெரிவித்துள்ளது.

“இரண்டாம் கட்ட சோதனையை விரைவில் தொடங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம். சோதனையின் முதலாம் கட்டம் இன்னும் தொடர்கிறது” எஸ்யுஎம் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் டாக்டர் வெங்கட் ராவ் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகள், உருவாக்கப்பட்ட ஆன்டிபாடிகளின் அளவைப் பொறுத்து தடுப்பூசி எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று டாக்டர் ராவ் கூறினார். தடுப்பூசியின் முதல் கட்ட சோதனையில் பக்க விளைவுகள் எதுவும் உருவாகவில்லை என்று அவர் கூறினார். .  

மத்திய அரசு அனுமதியளித்ததை அடுத்து இந்தியாவின் உள்நாட்டு கொரோனா தடுப்பூசியான கோவாக்சின், மனித மருத்துவ பரிசோதனையின் இரண்டாம் கட்டத்தைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Views: - 8

0

0