மகாராஷ்டிராவில் தொடர்ந்து வேகம் காட்டும் கொரோனா..! மார்ச் 8 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு..!

27 February 2021, 7:33 pm
Corona_Lockdown_UpdateNews360
Quick Share

அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவின் அமராவதி மற்றும் அச்சல்பூரில் உள்ள அதிகாரிகள் மார்ச் 8’ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் முழு ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

பிப்ரவரி 21 அன்று அமராவதி நகரம் மற்றும் அச்சல்பூர் நகரத்தில் தினசரி கொரோனா நோய்த்தொற்றுகள் அதிகரித்த நிலையில் ஏழு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு வாரத்திற்குப் பிறகு இது மேலும் நீட்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஊரடங்கு காலத்தில், சந்தைகள் மற்றும் பிற நிறுவனங்கள் மூடப்படும். இருப்பினும், அனைத்து அத்தியாவசிய சேவைகளும் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், மாவட்ட ஆட்சியர் ஷேலேஷ் நவி, “நீச்சல் குளங்கள் மற்றும் உட்புற விளையாட்டுகளும் மூடப்பட்டிருக்கும். அதே நேரத்தில் மத விழாக்களில் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார்.

மகாராஷ்டிராவில் கொரோனா நிலைமை

மகாராஷ்டிரா தினசரி பாதிப்புகளில் அமராவதி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள கொரோனா ஹாட்ஸ்பாட்களில் தொற்றுக்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பு உள்ளது. விதர்பா பிராந்தியத்தின் யவத்மால், அகோலா, அமராவதி, வர்தா உள்ளிட்ட பல மாவட்டங்களில் நிலைமை செப்டம்பர் நிலையை எட்டியுள்ளது.

அமராவதி, மும்பை, நாக்பூர், புனே, பிம்ப்ரி சின்ச்வாட், நாசிக், அவுரங்காபாத், தானே, நவி மும்பை, கல்யாண்-டோம்பிவிலி, அகோலா, யவத்மால், வாஷிம் மற்றும் புல்தானா ஆகியவை மாநிலத்தில் கொரோனா விதிமுறைகளை கடுமையாக எதிர்கொள்ளும் நகரங்களில் அடங்கும். 

நேற்று மட்டும் மகாராஷ்டிராவில், 8,000’க்கும் மேற்பட்ட புதிய பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது மற்றும் தொடர்ந்து மூன்றாவது நாளாக 48 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மும்பை, புனே, நாக்பூர் மற்றும் அமராவதி ஆகிய நான்கு நகரங்களும் சேர்ந்து புதிய பாதிப்புகளில் 3,401 அல்லது 40 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

புதிய தொற்றுநோய்களால், மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 21,38,154’ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 52,041’ஐ எட்டியுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 67,608 ஆக உள்ளது.

Views: - 8

0

0