பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் மகன் கைது..!

29 October 2020, 4:31 pm
Bineesh_Kodiyeri_UpdateNews360
Quick Share

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி, பெங்களூரு போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருடனான தொடர்புக்காக பெங்களூரில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தால் இன்று கைது செய்யப்பட்டார். 

முன்னதாக இன்று காலை 11 மணிக்கு பினீஷ் பெங்களூரு அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்திற்கு விசாரணைக்கு வந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக பினீஷை அமலாக்கத்துறை விசாரிப்பது இது இரண்டாவது முறையாகும். முதல்முறையாக அக்டோபர் 3’ம் தேதி, இது தொடர்பாக அவர் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொச்சியைப் பூர்வீகமாகக் கொண்ட அனூப் முகமதுவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்.சி.பி) கைது செய்து விசாரித்தபோது பெங்களூரு போதைப் பொருள் வழக்குகளில் பினீஷின் பெயரும் அடிபட்டது.

பினீஷ் அவரும் அனூப்பும் நண்பர்கள் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெங்களூரில் ஒரு ஹோட்டலைத் தொடங்க நிதி உதவி செய்ததாகவும் கூறினார். போதைப்பொருள் வழக்கு தொடர்பாக பினீஷ் கடந்த மாதம் அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட பின்னர், என்சிபி பினீஷ் வாக்குமூலத்தின் விபரங்களைக் கோரியிருந்தது. 

ஆனால் பினீஷ் மற்றும் அனூப் ஆகியோருக்கு இடையே வேறு பரிவர்த்தனைகளும் இருந்தன என்றும் தொடர்ந்து ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்தனர் என்றும் கூறப்பட்டது.

அனூப் அனிகா என்ற பெண்ணால் இயக்கப்படும் ஒரு கும்பலின் ஒரு பகுதியாக இருந்தார். மேலும் அனிகா மற்றும் அனூப் இருவரிடமிருந்தும் ஏராளமான போதைப்பொருட்களை என்சிபி கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் பெங்களூரில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறை இதில் புழங்கிய பணம் குறித்து விசாரித்து வருகிறது.

Views: - 26

0

0

1 thought on “பெங்களூரு போதைப்பொருள் கடத்தல் வழக்கு..! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் மகன் கைது..!

Comments are closed.