3 வருடமாக 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. மயங்கிய சிறுமியை தூக்கிலிட்ட காமுகன் : தடயத்தை அழிக்க நாடகம்.. மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் கைது!!

6 July 2021, 8:21 pm
Kerala Rape CPM- Updatenews360
Quick Share

கேரளா : 6 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து, சினிமா பாணியில் தடயத்தை அழிக்க நினைத்த மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த முக்கியர பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சுரக்குளம் எஸ்டேட் தேயிலை தோட்ட கூலி தொழிலாளர்களாக கண்ணன்-பிரேமா தம்பதி பணிபுரிகின்றனர்.

இவர்களுக்கு கபில் என்ற மகனும், 6 வயதில் கனிஷ்கா என்ற மகளும் உள்ளனர். கடந்த மாதம் 30 ஆம் தேதி தம்பதி வேலைக்குச் சென்ற நிலையில், அண்ணன் கபில் சலுான் கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளர்.

அப்போது வீட்டின் கதவு உள் பக்கமாக பூட்டபட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த கபில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, தங்கை தூக்கிட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்த போது, சிறுமி கழுத்திறுகி இறந்து இருக்கலாமோ என சந்தேகம் கொண்டனர். அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே வண்டிப்பெரியாறு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் சடலத்தை கைப்பற்றி, இடுக்கி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்குகொண்டு சென்றனர்.

இதற்கிடையில் சிறுமியின் இறப்பில் மர்மம் இருப்பதாக பெற்றோர் மற்றும் உறவினர் வண்டிப்பெரியாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்தது.

அதில், சிறுமியை யாரோ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எஸ்டேட் பகுதியில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளிகளை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த அர்ஜுன் (வயது 22) என்பவரை விசாரணை மேற்கொண்ட பொழுது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்,

இதனால் சந்தேகம் வலுவடைய போலீசார் விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது. கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞரணித் தலைவராக உள்ளவர் அர்ஜூன். 22 வயதான அவன், 6 வயது சிறுமியை கடந்த 3 வருடங்களாகவே பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், சம்பவம் நடந்த அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியை முன் பக்க வாசல் வழியாக வீட்டிற்குள் நுழைந்து தகாத உறவுக்கு அழைத்த போது, சிறுமி கதறியதால், சிறுமியின் சத்தம் வெளியே கேட்ட கூடாது என்பதற்காக சிறுமியின் வாயை மூடியுள்ளான்.

ஆனால் மூச்சு விட முடியாமல் சிறுமி மயக்கமடைந்துள்ளார். சிறுமி இறந்து விட்டதாக நினைத்த அர்ஜுன், ஊஞ்சல் ஆடி சிறுமி உயிரிழந்ததை போல வீட்டில் உள்ள ஊஞ்சலில் கட்டி தொங்கவிட்டுள்ளான் அந்த காமுகன்.

பின்னர் வீட்டை உள் பக்கமாக பூட்டி வைத்து விட்டு ஜன்னல் வழியாக தப்பிச் சென்றதாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தான். மேலும் சிறுமியின் அண்ணனுக்கு உதவுவது போல நடித்துள்ளான்.

அதிர்ந்து போன போலீஸ், அர்ஜுனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். வெளியில் சிறுமியிடம் அண்ணன் போல் பழகி வந்த அர்ஜூன், மூன்று வருடமாக அவரை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம், அப்பகுதியினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 299

1

1