அயோத்தியில் பூமி பூஜை..! அசாமில் வன்முறை..! பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்..! அசாம் அரசு அதிரடி நடவடிக்கை..!

6 August 2020, 2:31 pm
guwahati_security_personnel_updatenews360
Quick Share

அயோத்தியில் ராமர் கோவிலின் பூமி பூஜையை ஒட்டி நடந்த வகுப்புவாத மோதல்களைத் தொடர்ந்து அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதலால் ஒரு சிலர் காயமடைந்தனர். கோருதுபா மற்றும் பாரஹிங்கோரி கிராமத்தில் தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு நிலைமையைக் கருத்தில் கொண்டு தெலபாரா மற்றும் தேக்கியாஜுலி காவல் நிலையங்களின் கீழ் உள்ள பகுதிகள் ஊரடங்கில் வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மன்வேந்திர பிரதாப் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் நடந்த ராமர் கோவிலின் பூமி பூஜையை கொண்டாடுவதற்காக பஜ்ரங் தள உறுப்பினர்கள், நேற்று மாலையில் பைக் பேரணியை மேற்கொண்டதை அடுத்து இந்த மோதல்கள் வெடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து கலவரம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ள இராணுவம், இன்று அதிகாலை, சிக்கலான பகுதிகளில் கொடி அணிவகுப்பு நடத்தியது.

மாவட்டத்தில் உள்ள தெலமாரா மற்றும் தேக்கியாஜுலி காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் பேரில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தியதாக சோனித்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நுமல் மகாதா தெரிவித்தார்.

“நாங்கள் ஏற்கனவே இரண்டு பேரை விசாரணைக்கு தடுத்து வைத்துள்ளோம். நேற்றிரவு முதல் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடந்ததாக எந்த அறிக்கையும் இல்லை. நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.” என்று அவர் கூறினார்.

இரு தரப்பிலிருந்தும் சுமார் 10 பேர் காயமடைந்ததாகவும் மகாதா கூறினார். எனினும், பஜ்ரங் தளம் சார்பில் குறைந்தது 12 பேர் காயமடைந்ததாகக் கூறினர்.

இதற்கிடையில், நிலைமையை மதிப்பிடுவதற்காக சம்பத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுமாறு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி  ஞானேந்திர பிரதாப் சிங் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் ஏற்கனவே சென்று கொண்டிருக்கிறார் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே சோனித்பூர் காவல் கண்காணிப்பாளர் முக்தஜோதி தேவ் மகாந்தாவும் நேற்று மாலை முதல் அந்த இடத்தில் முகாமிட்டுள்ளார். போரா சிங்கோரியில் உள்ள ஒரு கோவிலுக்கு பைக் மூலம் வந்த ஆர்வலர்கள் சென்று கொண்டிருந்தபோது, உரத்த இசை மற்றும் வாத்திய முழக்கங்களை எழுப்பிய போது மோதல்கள் வெடித்தன.

மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உள்ளூர் மக்கள் இந்த முழக்கங்களை எதிர்த்தனர் என்றும், மேலும் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் இவ்வளவு பெரிய கூட்டம் இருப்பதைக் கேள்விக்குள்ளாக்கியது சச்சரவுக்கு வழிவகுத்தது. இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே சோனித்பூர் மாவட்ட துணை ஆணையர் மன்வேந்திர பிரதாப் சிங் சம்பவ இடத்தை அடைந்தார்.

“ஒரு இனவாத மோதலாக மாறிய நிலைமையைக் கட்டுப்படுத்த, போலீசார் முதலில் லாதிசார்ஜ் செய்து பின்னர் வானத்தை நோக்கிச் சுட்டனர். பல பைக்குகள் மற்றும் பிற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்ட பின்னர் கூடுதல் படைகள் அங்கு நிறுத்தப்பட்டன. இதையடுத்து ஊர்வலத்திற்கு எந்த அனுமதியும் இல்லை.” என்று சிங் நேற்று கூறியிருந்தார்.

Views: - 8

0

0