கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்கு நேரடித் தொடர்பு..! சுங்கத்துறை பிரமாணப்பத்திரம் தாக்கல்..!

6 March 2021, 10:47 am
Pinarayi_Vijayan_UpdateNews360
Quick Share

மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக அரசியல் வெப்பநிலையை அதிகரிக்கும் விதமாக, கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சுங்கத்துறை, கேரள உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் பி.ஸ்ரீராமகிருஷ்ணன், மற்றும் மாநில அமைச்சரவையின் மூன்று அமைச்சர்கள் மற்றும் சபாநாயகரின் முறையற்ற மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி தெளிவாகக் கூறியுள்ளார் என சுங்கத்துறை தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

சுங்கத் துறையின் இந்த அறிக்கையை கொச்சியின் சுங்க ஆணையர் சுமித் குமார் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்தார் இதையடுத்து, சுங்கத்துறை வட்டாரங்கள், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் மார்ச் 12’ஆம் தேதி சுங்கத்துறை முன் ஆஜராக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் ஸ்வப்னாவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட்ட கூடுதல் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள சிறைத்துறை டிஜிபி அளித்த மனுவை சுங்கத்துறை எதிர்த்தது.

ஸ்வப்னா முன்னதாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சிறையில் மிரட்டப்பட்டார் என்றும், கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட நபர்களின் பெயர்களை வெளிப்படுத்தினால் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 164 மற்றும் சுங்கச் சட்டத்தின் பிரிவு 108’ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஸ்வப்னாவின் அறிக்கைகளை மேற்கோள் காட்டி சுங்கத்துறையின் பிரமாணப் பத்திரத்தில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் முந்தைய தூதருடன் முதலமைச்சரின் நெருங்கிய தொடர்புகள் மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் குறித்து அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மற்றும் அவரது முதன்மை செயலாளர் மற்றும் ஒரு தனிப்பட்ட ஊழியருடனான அவரது நெருங்கிய தொடர்பு இது மேற்கொள்ளப்பட்டது.”எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வருக்கு எதிராக சுங்கத்துறை நேரடியாக குற்றச்சாட்டை முன்வைப்பது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் அவரது முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கரின் பங்கு கடத்தல் மற்றும் தொடர்புடைய வழக்குகளை விசாரிக்கும் பல மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சபாநாயகரின் தனிப்பட்ட ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் சுங்கத்துறையால் விசாரிக்கப்பட்டனர்.

“கேரளாவின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் தூதரக அதிகாரிகள் மற்றும் சிலருக்கு இடையேயான இணைப்பாகவும், மாநில அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களின் மறைவில் சட்டவிரோத நிதி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதிலும் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரின் பங்கு இருந்தது ஸ்வப்னாவால் வெளிப்படுத்தப்பட்டது.” என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது கேரள முதல்வருக்கே நேரடியாக இதில் தொடர்பு உள்ளதாக சுங்கத்துறை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது கேரள அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது. இது சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக எதிரொலிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அஞ்சுகின்றனர்.

Views: - 2

0

0