விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்த கொம்பன்கள் : விரட்டியடித்த விவசாயிகளை மிரள வைத்த யானைகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 October 2021, 1:07 pm
Elephants - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அருகே விளை நிலங்களில் புகுந்த காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் விரட்டியடித்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் மண்டலத்தில் உள்ள வெருகுத்தப்பள்ளி, சியாமராஜபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள விவசாய நிலங்களில் மூன்று காட்டு யானைகள் இன்று காலை புகுந்தன.

மேலும் விளைநிலங்களை மிதித்து சேதப்படுத்தியது. அங்கு காவலுக்கு இருந்த விவசாயிகள் யானைகளை விரட்டி அடித்தனர். தற்போது மழை பெய்து விவசாயம் செய்ய தேவையான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்துவரும் நிலையில் விலை நிலங்களை காட்டுயானைகள் சேதப்படுத்துவதால் அந்தப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் உள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 338

0

0