கடலில் மிதக்கும் மாஸ்க் மற்றும் கையுறைகள் – கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து..!

2 September 2020, 9:09 am
Quick Share

மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற கொரோனா பாதுகாப்பு கவசங்கள் பொது வெளியில் வீசி எரியப்படுவதால் பேராபத்து நிகழவுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாண்டவம் இன்றுவரை ஓயவில்லை. கடும் அச்சத்தில் உள்ள உலக மக்களின் அன்றாட வாழ்கையில் தவிற்விக்க முடியாத அங்கமாக மாஸ்க் மற்றும் கையுறைகள் மாறிவிட்டன.

இந்த சூழலில் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க், கையுறை போன்றவைகள் கடைசியாக எங்கு செல்கிறது என்பதை யோசிக்கும் கட்டாயத்திற்கு மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. மனிதர்களுக்கு கொரோனா தாக்காமல் இருக்க உலகம் முழுவதும் பில்லியன் கணக்கில் மாஸ்க் மற்றும் கையுறைகள் தயாரிக்கப்படுகிறது.

இவை அனைத்தும் பொது இடங்களில் வீசி எரியப்பட்டால் சுற்று சூழலின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏன் என்றால், ஒரு மாஸ்க் மண்ணோடு மண்ணாக மக்கிப் போக குறைந்தது 400 ஆண்டுகள் ஆகும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மட்டும் இன்றி மத்திய தரைக்கடல் பகுதியில் ஏராளமான மாஸ்க் மற்றும் கையுறைகள் தண்ணீரில் மிதக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பிரான்சின் ஆபரேசன் கிளீன் சி என்ற அமைப்பு வெளியிட்டு அதனுடன், கடலில் ஜெல்லி மீன்களை விட அதிகப்படியான மாஸ்குகள் குவிந்து உலகை அச்சுறுத்தும் மற்றொரு அபாயம் நேரிடப்போவதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்ற கொரோனா பாதுகாப்பு கவசங்கள் பொது வெளியில் வீசி எரியப்படுவதால் மற்றவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

இந்த சூழலில் மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான் “நாம் இல்லை என்றாலும் இயற்கை வாழும், இயற்கை இல்லாமல் நாம் வாழ முடியாது” என்பது மட்டும் தான். ஆகையால், மாஸ்க் மற்றும் கையுறைகள் போன்றவைகளை பொது வெளியிலும், கடல் பகுதிகளிலும், நீர் நிலைகளிலும் வீசி எரிவதை தவிற்க வேண்டும்.

Views: - 0

0

0