பைக் மீது நின்று கொண்டு ஆபத்தான சாகசம் : வைரலான வீடியோவால் இளைஞர்களுக்கு வலை!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2021, 12:30 pm
Thirupati Youth Attrocities -Updatenews360
Quick Share

ஆந்திரா : விஜயவாடா துர்கா மேம்பாலத்தில் ஓடும் பைக் மீது நின்று வானத்தை நோக்கி பொம்மை துப்பாக்கியால் சுட்டு இளைஞர்கள் அட்டகாசம் செய்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் துர்க்கையம்மன் கோயில் உள்ளது. கோயில் எதிரே உள்ள மேம்பாலத்தில் தொடர்ந்து சமீபகாலமாக இளைஞர்கள் பைக்கில் ஸ்டன்ட் செய்தபடியும் பொம்மை துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டும் வீடியோ எடுக்கின்றனர்.

விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் இவ்வாறு ஆபத்தான சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி அவ்வப்போது பைக் ரேஸ் நடத்துவதும் விஜயவாடா இளைஞர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது.

மோட்டார் சைக்கிள்களில் நம்பர் பிளேட்டுகளை அகற்றி சாலையைச் சுற்றி வரும் இளைஞர்கள் தங்கள் சாகசங்களை வீடியோ எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே இது போன்ற இளைஞர்களை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து விஜயவாடா டிராபிக் அடிஷனல் டிஜிபி சர்க்கார் கூறுகையில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களை தேடி வரும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Views: - 285

0

0