மாமியாரை நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த மருமகள் : பதை பதைக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran
12 October 2020, 3:10 pm
Daughter in Law Atttack Motherinlaw - Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஐதராபாத் அருகே 55 வயது மதிக்கத்தக்க மாமியாரை அவரது மருமகள் நடுரோட்டில் இழுத்து போட்டு அடித்த கொடூரமான காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மல்லேபள்ளி பகுதியில் அடுக்குமாடியில் மாமியார், மருமகள் தனித்தனியாக வசித்து வருகின்றனர். மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே நீண்ட நாட்களாவே சண்டை இருந்து வந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் வீட்டில் மாமியார் குடியிருந்து வருகிறார். மேல் வீட்டில் இருக்கும் தனது மருமகளின் இல்லத்திற்கு செல்லும் தண்ணீரை மாமியார் நிறுத்தி இருக்கிறார். இதுதான் சண்டைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

உஸ்மா பேகத்தின் கணவர் உபைத் அலி கான் சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார். இருவருக்குமே இது இரண்டாவது திருமணம். கடந்தாண்டு தான் இருவருக்கும் திருமணமாகி இருக்கிறது. போலீசார் தற்போது மாமியார், மருமகள் இருவருக்கும் கவுன்சிலிங் செய்து வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் தனது கணவருடன் பேசுவதற்கு மற்றும் அவருடன் செல்வதற்கு மாமியார் அனுமதிப்பதில்லை என்று மருமகள் குற்றம்சாட்டியுள்ளார். 55 வயது மதிக்கதக்க மாமியார் தஸ்நீம் சுல்தானாவை மருமகள் உஸ்மா பேகம் நடுரோட்டில் வைத்து அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 49

0

0