தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஏலம்..! சஃபெமா சட்டத்தின் கீழ் மத்திய அரசு நடவடிக்கை..!

10 November 2020, 11:37 am
Dawood_Ibrahim_UpdateNews360
Quick Share

கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவணி கையாளுபவர்கள் (சொத்து பறிமுதல்) சட்டத்தின் (சஃபெமா) கீழ் இன்று கொங்கனில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமத்தில் நிழல் உலக தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் ஏலம் விடப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாவூத்தின் உதவியாளர் இக்பால் மிர்ச்சியின் இரண்டு பிளாட்களும் ஏலம் விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சஃபெமாவின் கீழ் நடக்கும் இந்த ஏலம் ஹரிகோவிந்த் சிங் எனும் அதிகாரியின் மேற்பார்வையில் நடக்க உள்ளது.

சஃபெமாவின் கீழ், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தாவூத்தின் 13 சொத்துக்களையும் ஏலம் விட நிதி அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இருப்பினும், கொரோனா தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு ஆகியவை திட்டத்தை ஒத்திவைக்க கட்டாயப்படுத்தின.

ஒரு சஃபெமா அதிகாரி ஒருவர், நடைமுறைகளின் படி வருங்கால ஏலதாரர்களால் சொத்துக்கள் பரிசோதிக்கப்பட்டதாகக் கூறினார். “ஈ-ஏலம், பொது ஏலம் மற்றும் சீல் செய்யப்பட்ட டெண்டர்கள் ஆகிய மூன்று விற்பனை முறைகளும் இதற்கு பயன்படுத்தப்படும்.” என்று அவர் கூறினார்.

வெளிநாட்டுக்கு தப்பியோடிய தாவூத்தின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களின் சொத்துக்களை இணைக்க சஃபெமாவின் பிரிவு 68’எஃப் அதிகாரம் அளிக்கிறது. “ஊரடங்கு அனைத்து பிரிவுகளிலும் உள்ள மக்களை நிதி ரீதியாக மோசமாக பாதித்துள்ளதால், எங்களுக்கு என்ன மாதிரியான பதில் கிடைக்கும் என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று மற்றொரு அதிகாரி கூறினார்.

முன்னதாக, ஏப்ரல் 2019’இல், தாவூத்தின் சகோதரி ஹசீனா பார்கர் 2014’இல் இறந்த நிலையில், அவருக்கு சொந்தமான, நாக்பாடாவில் உள்ள கார்டன் ஹால் அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுர அடி பரப்பளவில் ஒரு பிளாட்டை ₹ 1.80 கோடிக்கு சஃபீமா அதிகாரிகள் ஏலம் விட்டனர்.

Views: - 29

0

0