அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி..! பாஜக தேசிய செயலாளர் அதிரடி..!

Author: Sekar
3 October 2020, 6:38 pm
Amit_Shah_Tarun_Chugh_UpdateNews360
Quick Share

சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான ஷிரோமணி அகாலிதளம் பாரதீய ஜனதாவுடன் கொண்டிருந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த பல தசாப்த உறவுகளை முறித்துக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய சில நாட்களில், பாஜகவின் புதிதாக நியமிக்கப்பட்ட தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், 2022 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், பாஜக அனைத்து 117 இடங்களிலும் தனித்து போட்டியிடும் என்று கூறியுள்ளார்.

பாராளுமன்ற பருவ மழைக் கூட்டத்தொடரில், மத்திய அரசு மூன்று விவசாய சீர்திருத்த மசோதாக்களை மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாகவும் மாற்றியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாய அமைப்புகள், இந்த சட்டங்கள் குறித்து அவதூறுகளை பரப்பி விவசாயிகளிடையே போராட்டத்தைத் தூண்டின.

விவசாயிகளின் போராட்டத்தால், கடந்த 2017 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்த ஷிரோமணி அகாலி தளம், இந்த விவகாரத்தால் தனது செல்வாக்கு இன்னும் சரிந்து விடுமோ எனும் அச்சத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, நீண்ட காலமாக நீடித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியது.

இதைப் பற்றி பேசிய தருண் சுக், 2022’ஆம் ஆண்டில் பஞ்சாபில் பாஜகவில் இருந்து ஒரு முதலமைச்சர் இருப்பார் என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல், கவுன்டவுன் தொடங்கியுள்ளதால் புதிய ஆற்றலுடன் தாங்கள் அடிப்படை வேலைகளைத் தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமிர்தசரஸில் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறித்து கட்சி தொண்டர்களால் பாராட்டப்பட்ட பின்னர் சுக் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

Views: - 48

0

0